சாதிய சாக்கடை
சாதி பார்த்து சமுகத்தை பிரிக்கும் சாக்கடை எண்ணம் சிந்தைவிட்டகலவேண்டுமெனில், அதற்கு மாற்று, மொழியுணர்வு கொண்டினைதல் என உறைக்கிறார் சிலர்! எந்த எண்ணம் கொண்டினைந்தாலும், மாந்தரனைவரும் இறைவனின் சாயலில் இறைவனால் ஆக்கப்பட்டவர்கள் என விவிலியம் கூறும் உண்மை உணர்ந்தால், அனைவரும் சமமே எனும் நிலையே உண்மையென உணர்வாய்! அவரவர் தமக்குத்தாம் சரி தவறை நிர்னையித்துக்கொள்ளும் ஆற்றல்பெற முதல் மாந்தன் செய்த பிழையே இன்று மாந்தனை பாழாக்கியுள்ளது! இப்பாழிலிருந்து மாந்தனை மீட்க அன்பின் ஆகசிறந்த அடையாளமாம் ஈகையை மண்டைஓட்டுமேடென்னும் ஓர் மேட்டில் மரணபொறியொன்றில் தன்னையே தந்தான் மாந்தனாய் வந்த இயவுள்! அன்பு அன்பென்று பறைசாற்ற முயலும் ஆகபெருந்தலைவர்பலர் மத்தேயு 5 முதல் 7 முடிய ஓதி கண்டால் தம் வாய் மூடிகொள்வர். மாந்தனாய் வந்தோன் உயிரதை தந்தான் ஈசனவன் தானே அன்பென காட்டினான். எழுந்துயிர்த்தனன் நாளொரு மூன்றிலென பாரதி பாடியதெத்துனை உண்மை! நேரில் கண்டோர் பறைசாற்றியுறைத்தார்! நம்பி நல்சிந்...