Posts

Showing posts from 2022

புதிய மனிதனுள் இருக்கும் ஆவி!

Image
இயேசுவின் சிலுவை கிரியை மற்றும் உயிர்த்தெழுதலினால், ஒரு புதிய மனுகுலத்தை தேவன் உருவாக்குகிறார்! இந்த புதிய மனிதனை அவர் உருவக்கிய விதம் சற்று ஆச்சரியமானது, ஏனென்றால், ஆதாமின் பாவத்தால் அடிமைகளான மனுகுலத்தை காப்பாற்ற தன் உயிரை தந்து மரித்து அடக்கம்பன்னப்பட்டு உயிர்த்தெழுந்தபின், உயிர்த்தெழுந்த கர்த்தரும், கிறிஸ்துவுமாகிய அவர், தமக்குள் ஒரே புதிய மனுகுலத்தை படைத்தார்! எப்படியென்றால், மரித்த கிறிஸ்துவை தேவன் உயிரோடெழுப்பியது தம்முடைய ஆவியைக்கொண்டு தான், அதேபோல கிறிஸ்துவை மரித்தோரிலிருந்தெழுப்பிய ஆவியைக்கொண்டு அவரை விசுவாசிக்கும் ஒவ்வொருவரையும், அவர்களுடைய மரித்த நிலைமையிலிருந்து உயிரோடெழுப்புகிறார்! ஆனால் இந்த புதிய மனுகுலம் வாழும் வீடு என்னவோ அதே பழைய மாமிச உடலில் தான்! ஆனால், இந்த ஆவியானவருக்கு மரித்தவனையே உயிரோடெழுப்பும் வல்லமையுள்ளதால், பழைய உடலின் மரித்த இச்சைகளை ஜெயிக்கவும் வல்லமையுண்டு என்பதை மறக்க வேண்டாம்! இந்த பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவையே மரித்தோரிலிருந்து எழுப்பும்படி தேவனால் அனுப்பப்பட்டவரென்றால், சாவுக்கேதுவான நம் உடல்களை உயிர்ப்பிக்கும் வல்லமை இவருக்கு உண்டு என்பதனைய...

எல்லாம் புதிதான மனிதன்

Image
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 எல்லாம் புதிதான மனிதன்!  1. புதிதாக ஆக்கப்பட்டவன் - புதிய வாழ்க்கை வாழும்படி கிறிஸ்துவோடு தன் பாவங்களுக்காக சிலுவையில் முற்றிலுமாக செத்தவன், அடக்கம்பண்ணப்பட்டு, கிறிஸ்துவோடு எழுந்தவன்!  2. மெய்யான நீதி - ஒன்றுக்கும் உதவாத சுய நீதியையோ கோட்பாடுகளையோ, தத்துவங்களையோ அல்ல, இயேசுவின் சிலுவை மரணத்தினால் உண்டான நீதியினால் ஆக்கப்படவன்! இப்படி தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன்!  3. பரிசுத்தம் - இந்த பொல்லாத உலகத்தில் இருந்து முற்றிலுமாக பிரித்தெடுக்கப்பட்டு, தேவனுக்காக, தேவனால், வாழும்படி ஆக்கப்பட்டவன்!  4. தேவ சாயல் - தீமையின் பிரதிநிதியாக இருந்தவன், இப்போது காணப்படாத தேவனின் சாயலான கிறிஸ்துவின் சாயலுக்குள் உருவாக்கப்பட்டு, கிறிஸ்து மூலமாக தேவனுக்கு பிரதிநிதியாக வாழும்படி செய்யப்பட்டவன்!  5. இவன் வாழ்வில் இனி எல்லாம் புதிது!! இனி பழையதொன்றும் இல்லை!  6. இனி தீமைக்கு நம்மை விற்றுப்போட வேண்டாம்!!  🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்...

கடவுளை நீ அறிந்திட வேண்டாமா?!

Image
🌟🌟🌟🌟🌟🌟🌟 உன்னை உன் தாயின் கருவில் உருவாக்கிய கடவுள், யாரும் அறிந்திட முடியாத இந்த அண்ட சராசரத்தை உருவாக்கிய கடவுள், நீ அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார் என்றால், உன்னை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை சிந்தித்து பார். உனக்காக தன் உயிரையே தந்து தன்னை அறிந்துகொள்ளும் அவரின் ஆவியை உனக்குள் வைத்து உன்னை மீட்ட இரட்சிப்பின் அதிபதியை உனக்கு அறிமுகப்படுத்தி தனிப்பட்ட முறையில் உன்னோடு உறவு கொண்டாடி, உனக்கு தன்னை வெளிப்படுத்திய கடவுளை, ஒரு தேவ பிள்ளையாக நீ அறிந்திட வேண்டாமா? காப்பாற்றப்பட்ட நீ இந்நேரம் அவர்பால் பயித்தியமாக இருந்திருக்கவேண்டும் அல்லவா?! அவர் அன்பு உன்னை நெருக்கவில்லையா?! இன்றாவது சிந்தி. உலக வாஞ்சை வேண்டாம் உனக்கு என் சகோதரனே , சகோதரியே!!  📖📖📖📖📖📖📖📖 இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல், இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம். நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களெ...

நாட்களை குறை கூறாதே!! காலத்தை மீட்டுக்கொள்!

Image
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️  நாம் வாழும் நாட்கள் பொல்லாதவைகளே! எனவே அதை சொல்லி சொல்லி நாமும் பொல்லாத கிரியைகளை செய்து தப்பித்துக்கொள்ள முடியும் என எண்ண வேண்டாம்! கர்த்தர் நமக்கு கொடுத்த காலத்தை மீட்டுக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. நம்முடைய நற்காலங்களில் நாம் எடுக்கும் சரியான முடிவுகளே, தீய காலங்களில் நம்முடன் துணையாய் நிற்கும்! நாம் தேவனுக்கு பிரியமில்லாத முடிவுகள் சிறிதேனும் எடுத்தால் அது நம்மை தொடரும்! எனவே ஞானமுள்ளவர்களாய் நடந்துகொள்வோம்.  🛑🛑🛑🛑🛑🔴 கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்ப...

கேள்வி பதில் கட்டுரை 1: கேள்வி: தேவன் என் ஜெபத்திற்கு பதில் தரவில்லை என்றால், வேறு ஆவிக்குரியவர் ஜெபித்தால் தருவாரா?

Image
பதில்: 1. சகரியா, எலிசெபெத்து அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நாம் உதாரனத்திற்கு பார்க்கும்போது, தேவன் அவர்கள் ஜெபத்துக்கு உடனடியாக பதிலை தரவில்லை என்பதை நாம் நன்று அறிவோம். இவ்விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்: அ. அவர்கள் தேவனிடத்தில் கேட்டது கர்த்தருடைய சித்தம் என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருந்தபடியால் அவர்கள் அதில் உறுதியாக இருந்தார்கள்  ஆ. அவர்கள் காத்திருப்பதில் சோர்ந்துபோகவில்லை என்பதை நாம் அறிவோம், காரணம் அவர்கள் ஆபிரகாம் சாராளை போல குறுக்கு வழியை தேடவில்லை  இ. காத்திரு என்பதும் ஒரு பதில் தானே?  ஈ. “நீ கேட்டது உனக்கு கிடையாது” என்பதும் பதில் தானே?  உ. சில நேரம் தேவன் இதை நமக்கு தரமாட்டார் என்று நாம் நன்றாக அறிந்தும், நாம் கேட்டுக்கொண்டு இருப்பது நம் தவறு. மற்றும் தேவன் நமக்கு அதை தரவில்லை என்பதற்காக நாமாக ஒரு முயற்சி செய்து, இதை தேவன் கொடுத்தார் என்று சொல்லிக்கொள்வது, பின்னர் விளைவுகளை பார்க்கும்போது நமக்கு நாம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பது நமக்கு பாடம் புகட்டும். ஊ. எனவே, தேவன் நமக்கு பதில் தரவில்லை என்று ஒருபோதும் ச...

உயிர்கல் - நீ உயர இதைக்கல் ! (கட்டுரை தொடர் - 1)

Image
கல்லுக்கு உயிர் இல்லை, உயிருள்ளது கல் இல்லை! கல்லை வைத்து பல வேலைகள் செய்யலாம். ஒருவரை காயப்படுத்தலாம், வீடு கட்டலாம், பாதுகாப்பு அரன் அமைக்கலாம், இன்னும் பற்பல விஷயங்களுக்கு அது பயன்படும். பரிசுத்த பைபிளில் மனிதனுக்கு பற்பல உருவக சொற்களும் உவமைகளும் சொல்லப்பட்டாலும், அதிகம் பேர் கவனியாமற்போன ஒரு உருவகம் கல் என்பது. அதைப்பற்றி இக்கட்டுரையில் சற்று சிந்திக்கலாம்.                   இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவர் திருமுழுக்கு பெற்ற பின், தன் சேவையின் ஆரம்ப நாட்களில் தன்னைப் பின்பற்றி வந்த அந்திரேயா என்பவரால் இயேசுவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சீமோன் எனும் ஒரு மனிதனை கண்ட மாத்திரத்தில், அவனை பார்த்து சொன்னார்: "சீமோனே, இனி நீ கேபா என்று அழைக்கப்படுவாய்" என்றார். "கேபா" என்பது ஒரு எபிரெய மற்றும் அராமிய சொல், அதன் அர்த்தம் "கல்" என்பது. இயேசுவின் ஒவ்வொரு சொல்லும் செயலும், அவரை குறித்து பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட இறைவாக்கியங்கள் அனைத்தும் நிறைவேரும்படி இருந்தது. அதாவது, பரிசுத்த பைபிளில் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்பட கூடிய ஆ...

கிறிஸ்துவும் கஷ்டமும்!

Image
கிறிஸ்துவை பின்பற்றுவது கஷ்டமாக இருக்கிறது என்று நினைக்கும் கூட்டத்தின் நடுவே, நம்மவர் பலர், கஷ்டங்களை சகிப்பதே கிறிஸ்துவை பின்பற்றுதல் என்பதால், கஷ்டங்களை காட்டிலும் கிறிஸ்து மேலானவராக இருப்பதை உணர்ந்த அவர்கள், கிறிஸ்துவுக்காக கஷ்டங்களை சகிப்பதை கஷ்டமாக கருதுவதில்லை.  கிறிஸ்துவை பின்பற்றினால் மரணம் வெகு விரைவில் என்ற நிலை இருந்தாலும், கிறிஸ்துவை விரைவில் சந்தித்து துயர் நீங்கி ஆறுதல் அடையும் வாழ்வை விரைவில் சந்திக்க ஏங்குவதால், அவ்வாழ்வை கஷ்டமாக நினைப்பதில்லை.  இப்படி ஒரு வாழ்வை நாம் வாழ, அப்படி கிறிஸ்து என்ன செய்தார்? என கேட்கும் நண்பர்கள் இதை வாசித்தால், இயேசு உங்களை நேசிக்கிறார் என்பதே பதில்! அவருக்கு நாம் நம்மை அளித்தால், நம்மை அழிக்கும் தீமையை நம்மை விட்டு அழித்து, அழியாத வாழ்வை இலவசமாக தருகிறார்!  அதற்காக அழிந்து போகும் இந்த மனுகுலத்தின் அவலத்தை, அவர்மீது ஏற்று சிலுவையில் தம் வாழ்வை நம் அவலம் அழிக்க அளித்தார்.  வா! அவருக்கு உன்னை தா! உன் வாழ்வு அழியா வாழ்வாய் உனக்கு திரும்ப கிடைக்கும்!  - Joshua Thangaraj G 

சாதிய சாக்கடை

Image
 சாதி பார்த்து சமுகத்தை பிரிக்கும் சாக்கடை எண்ணம் சிந்தைவிட்டகலவேண்டுமெனில், அதற்கு மாற்று, மொழியுணர்வு கொண்டினைதல் என உறைக்கிறார் சிலர்!     எந்த எண்ணம் கொண்டினைந்தாலும், மாந்தரனைவரும் இறைவனின் சாயலில் இறைவனால் ஆக்கப்பட்டவர்கள் என விவிலியம் கூறும் உண்மை உணர்ந்தால், அனைவரும் சமமே எனும் நிலையே உண்மையென உணர்வாய்!       அவரவர் தமக்குத்தாம் சரி தவறை நிர்னையித்துக்கொள்ளும் ஆற்றல்பெற முதல் மாந்தன் செய்த பிழையே இன்று மாந்தனை பாழாக்கியுள்ளது!        இப்பாழிலிருந்து மாந்தனை மீட்க அன்பின் ஆகசிறந்த அடையாளமாம் ஈகையை மண்டைஓட்டுமேடென்னும் ஓர் மேட்டில் மரணபொறியொன்றில் தன்னையே தந்தான் மாந்தனாய் வந்த இயவுள்!       அன்பு அன்பென்று பறைசாற்ற முயலும் ஆகபெருந்தலைவர்பலர் மத்தேயு 5 முதல் 7 முடிய ஓதி கண்டால் தம் வாய் மூடிகொள்வர். மாந்தனாய் வந்தோன் உயிரதை தந்தான் ஈசனவன் தானே அன்பென காட்டினான். எழுந்துயிர்த்தனன் நாளொரு மூன்றிலென பாரதி பாடியதெத்துனை உண்மை! நேரில் கண்டோர் பறைசாற்றியுறைத்தார்!     நம்பி நல்சிந்...