கடவுளை நீ அறிந்திட வேண்டாமா?!
🌟🌟🌟🌟🌟🌟🌟
உன்னை உன் தாயின் கருவில் உருவாக்கிய கடவுள், யாரும் அறிந்திட முடியாத இந்த அண்ட சராசரத்தை உருவாக்கிய கடவுள், நீ அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார் என்றால், உன்னை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை சிந்தித்து பார். உனக்காக தன் உயிரையே தந்து தன்னை அறிந்துகொள்ளும் அவரின் ஆவியை உனக்குள் வைத்து உன்னை மீட்ட இரட்சிப்பின் அதிபதியை உனக்கு அறிமுகப்படுத்தி தனிப்பட்ட முறையில் உன்னோடு உறவு கொண்டாடி, உனக்கு தன்னை வெளிப்படுத்திய கடவுளை, ஒரு தேவ பிள்ளையாக நீ அறிந்திட வேண்டாமா? காப்பாற்றப்பட்ட நீ இந்நேரம் அவர்பால் பயித்தியமாக இருந்திருக்கவேண்டும் அல்லவா?! அவர் அன்பு உன்னை நெருக்கவில்லையா?! இன்றாவது சிந்தி. உலக வாஞ்சை வேண்டாம் உனக்கு என் சகோதரனே , சகோதரியே!!
📖📖📖📖📖📖📖📖
இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல், இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம். நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கும். கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம். ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம். இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
2 கொரிந்தியர் 5:12-21 TAOVBSI
https://bible.com/bible/339/2co.5.12-21.TAOVBSI
Comments
Post a Comment