கேள்வி பதில் கட்டுரை 1: கேள்வி: தேவன் என் ஜெபத்திற்கு பதில் தரவில்லை என்றால், வேறு ஆவிக்குரியவர் ஜெபித்தால் தருவாரா?
பதில்:
1. சகரியா, எலிசெபெத்து அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நாம் உதாரனத்திற்கு பார்க்கும்போது, தேவன் அவர்கள் ஜெபத்துக்கு உடனடியாக பதிலை தரவில்லை என்பதை நாம் நன்று அறிவோம். இவ்விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்:
அ. அவர்கள் தேவனிடத்தில் கேட்டது கர்த்தருடைய சித்தம் என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருந்தபடியால் அவர்கள் அதில் உறுதியாக இருந்தார்கள்
ஆ. அவர்கள் காத்திருப்பதில் சோர்ந்துபோகவில்லை என்பதை நாம் அறிவோம், காரணம் அவர்கள் ஆபிரகாம் சாராளை போல குறுக்கு வழியை தேடவில்லை
இ. காத்திரு என்பதும் ஒரு பதில் தானே?
ஈ. “நீ கேட்டது உனக்கு கிடையாது” என்பதும் பதில் தானே?
உ. சில நேரம் தேவன் இதை நமக்கு தரமாட்டார் என்று நாம் நன்றாக அறிந்தும், நாம் கேட்டுக்கொண்டு இருப்பது நம் தவறு. மற்றும் தேவன் நமக்கு அதை தரவில்லை என்பதற்காக நாமாக ஒரு முயற்சி செய்து, இதை தேவன் கொடுத்தார் என்று சொல்லிக்கொள்வது, பின்னர் விளைவுகளை பார்க்கும்போது நமக்கு நாம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பது நமக்கு பாடம் புகட்டும்.
ஊ. எனவே, தேவன் நமக்கு பதில் தரவில்லை என்று ஒருபோதும் சொல்ல முடியாது.
2.ஆவிக்குரிய மற்றவர் ஜெபித்தால் பதில் தருவாரா?
பல நேரம் நம்முடைய வாழ்வில், தேவனிடம் பல விஷயங்களை நாம் கேட்டும், தேவன் நமக்கு எதையும் வெளிப்படுத்தாமல் இருப்பது போல் நமக்கு தோன்றும். காரனம், நம் உலக வாழ்வில் நாம் எதிர்ப்பார்க்கும் பதிலை தேவன் தராமலிருக்குபோது, அது தேவன் பேசவில்லை என்று சொல்லி நாம் அந்த பதிலை ஒதுக்கி விடுவோம், காரனம் நம் விருப்பத்தை தேவன் நிறைவேற்ற வேண்டும் என்பதால். (உதாரனம்: சவுல்)
நாம் தேவனோடு நல்ல உறவில் இல்லாதபோது, தேவன் நம்மோடு பேச எத்தனித்தாலும், நாம் கவனிப்பதில்லை. (உதாரனம் : யோனா)
இந்த உறவை நாம் சரி செய்துகொண்டால், தேவன் நம்மோடு பேசுவது நமக்கு புரியவரும் (உதாரனம்: பவுல், எலியா)
இப்படிப்பட்ட நேரத்தில் பல தேவ பிள்ளைகளை கர்த்தர் நம் வாழ்விலே அனுப்பி நம்மை எச்சரிப்பார் (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) அதிலே நாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும். (உதாரனம் : தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலனாகிய பேதுரு மாயவித்தைக்காரனை எச்சரித்தல், மற்றும் நம் சபைகளில் தேவ செய்தி)
முடிவு: கர்த்தருக்கு தர விருப்பமில்லையென்றால், யார் ஜெபித்தாலும் தரமாட்டார்.
(உதாரனம்: யோசபாத் நாட்களில், மீகா தீர்க்கதரிசியின் சம்பவம்)

Comments
Post a Comment