உயிர்கல் - நீ உயர இதைக்கல் ! (கட்டுரை தொடர் - 1)
கல்லுக்கு உயிர் இல்லை, உயிருள்ளது கல் இல்லை! கல்லை வைத்து பல வேலைகள் செய்யலாம். ஒருவரை காயப்படுத்தலாம், வீடு கட்டலாம், பாதுகாப்பு அரன் அமைக்கலாம், இன்னும் பற்பல விஷயங்களுக்கு அது பயன்படும். பரிசுத்த பைபிளில் மனிதனுக்கு பற்பல உருவக சொற்களும் உவமைகளும் சொல்லப்பட்டாலும், அதிகம் பேர் கவனியாமற்போன ஒரு உருவகம் கல் என்பது. அதைப்பற்றி இக்கட்டுரையில் சற்று சிந்திக்கலாம். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவர் திருமுழுக்கு பெற்ற பின், தன் சேவையின் ஆரம்ப நாட்களில் தன்னைப் பின்பற்றி வந்த அந்திரேயா என்பவரால் இயேசுவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சீமோன் எனும் ஒரு மனிதனை கண்ட மாத்திரத்தில், அவனை பார்த்து சொன்னார்: "சீமோனே, இனி நீ கேபா என்று அழைக்கப்படுவாய்" என்றார். "கேபா" என்பது ஒரு எபிரெய மற்றும் அராமிய சொல், அதன் அர்த்தம் "கல்" என்பது. இயேசுவின் ஒவ்வொரு சொல்லும் செயலும், அவரை குறித்து பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட இறைவாக்கியங்கள் அனைத்தும் நிறைவேரும்படி இருந்தது. அதாவது, பரிசுத்த பைபிளில் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்பட கூடிய ஆ...