2023 சுதந்திர தின உரையில் பிரதமர் பேசியதை குறித்த என் கருத்துக்கள்:
கடந்த கால வரலாற்றில் நடந்த தவறுகளை சொல்லியே அரசியல் நடத்தும் போக்கு: கையில் கடப்பாறையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு மசூதியாக இடிப்பதும், ஊருக்குள் மக்களை ஏவி விட்டு ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விடுவதையும் தவிர என்ன சாதித்துள்ளது இந்த அரசு?! சாதனையை பட்டியல் போட்டு சொல்வாராம், அடுத்த வருடம் கொடியேற்றும்போது!! நாடாளுமன்றமாக இருந்தாலும், நாட்டு மக்கள் முன்பாக இருந்தாலும், மணிப்பூர் மாநிலத்தை பற்றி இவருக்கு ஓரிரண்டு நிமிடங்களுக்கு மேல் பேச முடியவில்லை! நெஞ்சு புடைக்க மிக துணிச்சலாக பேசக்கூடிய இவரால், மணிப்பூரைப்பற்றி பேசும்போது தைரியமாக பேச முடியவில்லை. பேச வேண்டுமே என்பதற்காக பேசினார் என்று அவரது தோரணையில் ( body language) தெரிந்தது. "தேசம் மணிப்பூரோடு நிற்கும்" என்று சொன்னார். அது உண்மைதான், அரசு நிற்கவில்லை தேசமே நின்றது, நிற்கும். ஏறக்குறைய 300 தேவ ஆலயங்கள் மணிப்பூரில் அழிக்கப்பட்டுள்ளது, 120 பள்ளிக்கூடங்கள் முகாம்க...