2023 சுதந்திர தின உரையில் பிரதமர் பேசியதை குறித்த என் கருத்துக்கள்:



         கடந்த கால வரலாற்றில் நடந்த தவறுகளை சொல்லியே அரசியல் நடத்தும் போக்கு:

கையில் கடப்பாறையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு மசூதியாக இடிப்பதும், ஊருக்குள் மக்களை ஏவி விட்டு ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விடுவதையும் தவிர என்ன சாதித்துள்ளது இந்த அரசு?! சாதனையை பட்டியல் போட்டு சொல்வாராம், அடுத்த வருடம் கொடியேற்றும்போது!!
      
         நாடாளுமன்றமாக இருந்தாலும், நாட்டு மக்கள் முன்பாக இருந்தாலும், மணிப்பூர் மாநிலத்தை பற்றி இவருக்கு ஓரிரண்டு நிமிடங்களுக்கு மேல் பேச முடியவில்லை! நெஞ்சு புடைக்க மிக துணிச்சலாக பேசக்கூடிய இவரால், மணிப்பூரைப்பற்றி பேசும்போது தைரியமாக பேச முடியவில்லை. பேச வேண்டுமே என்பதற்காக பேசினார் என்று அவரது தோரணையில் ( body language) தெரிந்தது.

        "தேசம் மணிப்பூரோடு நிற்கும்" என்று சொன்னார். அது உண்மைதான், அரசு நிற்கவில்லை தேசமே நின்றது, நிற்கும். ஏறக்குறைய 300 தேவ ஆலயங்கள் மணிப்பூரில் அழிக்கப்பட்டுள்ளது, 120 பள்ளிக்கூடங்கள் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன, 4 மாதங்களாக இணைய சேவை இல்லை, 70000 மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள், பல ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் கல்வி பறிக்கப்பட்டுள்ளது, மருந்துகள் பல இல்லை, இன்னும் பல இன்னல்கள் உள்ளன, ஆனால், "கடந்த சில வாரங்களாக அமைதி நிலவி வருகிறது போன்ற செய்திகள் வருகின்றன, அமைதி நிலைநாட்டப்படும்." என்று பொத்தாம் பொதுவாக தோராயமாக, உறுதியற்ற தொனியோடு, யாரோ மூன்றாம் மனுஷன் போல் பேசும் இவரை என்னவென்று சொல்வது?

       " 1200 ஆண்டுகளுக்கு மேல் நாம் கஷ்டப்பட்டு வருகிறோம்" என்று சொல்கிறாரே, ஆங்கிலேயர்களை குறைகூரிக்கொண்டு இருந்த இவர் இந்த வருட உரையில், முகலாய படையெடுப்பை மறைமுகமாக சொல்கிறார் என்றால், இவர்கள் அரசியலே கடந்த கால பிரச்சனைகளை கூறி வன்மத்தை கக்குவது தானோ?! அப்படி பார்த்தால் இன்னும் வரலாற்றில் பின் சென்றால், புத்த விகாரங்கள் பலவற்றை அழித்து, புத்த பிட்ச்சுக்களின் தளங்களுக்கு சன்மானம் தந்து, பல புத்த துறவிகளை கொன்று தானே இவர்கள் பல கோவில்களை கட்டி இந்து மதத்தை வளர்த்தார்கள்? புதிய கல்வி கொள்கையில் வரலாற்றை மாற்றி எழுதி அசோகர் போரை நிறுத்தியது மூலம், தேசத்தின் போர் வீரர்களுக்கு போர் செய்யும் தன்மை இழந்து போனது என்று அசோகரையே குறை சொல்லும் ஒரு தினிப்பை செய்துள்ளார்கள்?! இப்படி பேசிக்கொண்டே போகலாமே?

      வரலாற்றில் பின்னோக்கி சென்று முன்னோர்களின் தவறுகளை சொல்லி சொல்லி இன்று இருக்கும் பிரச்சனைகளை மக்கள் மனதை விட்டு நீக்கி மக்களை மடைமாற்றம் செய்து போலி வாக்குறுதிகளை அள்ளி விடும் அரசு எப்படி ஒரு நல்ல அரசாக இருக்க முடியும்? கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், எப்போதும் ஒரு பயத்துடன் வாழ வேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ள இந்த அரசு, ஒரு அரசாக தோற்று போய்விட்டது.

       அன்பு சொந்தங்களே, நம் தேசத்திற்காக ஜெபிப்போம், உண்மையான சுதந்திரத்தை நோக்கிய நமது பயணத்தில், நம்முடைய தேசத்தின் நன்மைக்காக தொடர்ந்து பாடு படுவோம். வன்முறையற்ற போராட்டங்களை முன்னெடுப்போம்!! நம் தலைமுறைக்கும், இனி வரும் தலைமுறைக்கும் ஒரு நல்ல இந்தியாவை விட்டு செல்வோம்.

- யோசுவா தங்கராசு ஞானசேகர்
இயன்முறை மருத்துவர், எழுத்தாளர், விவிலிய போதகர், நற்செய்தி களப்பணியாளர்.

#pmspeech #peacefulindia

Comments

Popular posts from this blog

When Ideologies Fail the Church: A Call to Holy Separation

Reclaiming Education as a Sacred Mission of the Church

Rethinking Humanity: What Jesus Reveals About the Dignity of Women