Posts

Showing posts from August, 2022

புதிய மனிதனுள் இருக்கும் ஆவி!

Image
இயேசுவின் சிலுவை கிரியை மற்றும் உயிர்த்தெழுதலினால், ஒரு புதிய மனுகுலத்தை தேவன் உருவாக்குகிறார்! இந்த புதிய மனிதனை அவர் உருவக்கிய விதம் சற்று ஆச்சரியமானது, ஏனென்றால், ஆதாமின் பாவத்தால் அடிமைகளான மனுகுலத்தை காப்பாற்ற தன் உயிரை தந்து மரித்து அடக்கம்பன்னப்பட்டு உயிர்த்தெழுந்தபின், உயிர்த்தெழுந்த கர்த்தரும், கிறிஸ்துவுமாகிய அவர், தமக்குள் ஒரே புதிய மனுகுலத்தை படைத்தார்! எப்படியென்றால், மரித்த கிறிஸ்துவை தேவன் உயிரோடெழுப்பியது தம்முடைய ஆவியைக்கொண்டு தான், அதேபோல கிறிஸ்துவை மரித்தோரிலிருந்தெழுப்பிய ஆவியைக்கொண்டு அவரை விசுவாசிக்கும் ஒவ்வொருவரையும், அவர்களுடைய மரித்த நிலைமையிலிருந்து உயிரோடெழுப்புகிறார்! ஆனால் இந்த புதிய மனுகுலம் வாழும் வீடு என்னவோ அதே பழைய மாமிச உடலில் தான்! ஆனால், இந்த ஆவியானவருக்கு மரித்தவனையே உயிரோடெழுப்பும் வல்லமையுள்ளதால், பழைய உடலின் மரித்த இச்சைகளை ஜெயிக்கவும் வல்லமையுண்டு என்பதை மறக்க வேண்டாம்! இந்த பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவையே மரித்தோரிலிருந்து எழுப்பும்படி தேவனால் அனுப்பப்பட்டவரென்றால், சாவுக்கேதுவான நம் உடல்களை உயிர்ப்பிக்கும் வல்லமை இவருக்கு உண்டு என்பதனைய...

எல்லாம் புதிதான மனிதன்

Image
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 எல்லாம் புதிதான மனிதன்!  1. புதிதாக ஆக்கப்பட்டவன் - புதிய வாழ்க்கை வாழும்படி கிறிஸ்துவோடு தன் பாவங்களுக்காக சிலுவையில் முற்றிலுமாக செத்தவன், அடக்கம்பண்ணப்பட்டு, கிறிஸ்துவோடு எழுந்தவன்!  2. மெய்யான நீதி - ஒன்றுக்கும் உதவாத சுய நீதியையோ கோட்பாடுகளையோ, தத்துவங்களையோ அல்ல, இயேசுவின் சிலுவை மரணத்தினால் உண்டான நீதியினால் ஆக்கப்படவன்! இப்படி தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன்!  3. பரிசுத்தம் - இந்த பொல்லாத உலகத்தில் இருந்து முற்றிலுமாக பிரித்தெடுக்கப்பட்டு, தேவனுக்காக, தேவனால், வாழும்படி ஆக்கப்பட்டவன்!  4. தேவ சாயல் - தீமையின் பிரதிநிதியாக இருந்தவன், இப்போது காணப்படாத தேவனின் சாயலான கிறிஸ்துவின் சாயலுக்குள் உருவாக்கப்பட்டு, கிறிஸ்து மூலமாக தேவனுக்கு பிரதிநிதியாக வாழும்படி செய்யப்பட்டவன்!  5. இவன் வாழ்வில் இனி எல்லாம் புதிது!! இனி பழையதொன்றும் இல்லை!  6. இனி தீமைக்கு நம்மை விற்றுப்போட வேண்டாம்!!  🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்...

கடவுளை நீ அறிந்திட வேண்டாமா?!

Image
🌟🌟🌟🌟🌟🌟🌟 உன்னை உன் தாயின் கருவில் உருவாக்கிய கடவுள், யாரும் அறிந்திட முடியாத இந்த அண்ட சராசரத்தை உருவாக்கிய கடவுள், நீ அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார் என்றால், உன்னை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை சிந்தித்து பார். உனக்காக தன் உயிரையே தந்து தன்னை அறிந்துகொள்ளும் அவரின் ஆவியை உனக்குள் வைத்து உன்னை மீட்ட இரட்சிப்பின் அதிபதியை உனக்கு அறிமுகப்படுத்தி தனிப்பட்ட முறையில் உன்னோடு உறவு கொண்டாடி, உனக்கு தன்னை வெளிப்படுத்திய கடவுளை, ஒரு தேவ பிள்ளையாக நீ அறிந்திட வேண்டாமா? காப்பாற்றப்பட்ட நீ இந்நேரம் அவர்பால் பயித்தியமாக இருந்திருக்கவேண்டும் அல்லவா?! அவர் அன்பு உன்னை நெருக்கவில்லையா?! இன்றாவது சிந்தி. உலக வாஞ்சை வேண்டாம் உனக்கு என் சகோதரனே , சகோதரியே!!  📖📖📖📖📖📖📖📖 இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல், இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம். நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களெ...

நாட்களை குறை கூறாதே!! காலத்தை மீட்டுக்கொள்!

Image
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️  நாம் வாழும் நாட்கள் பொல்லாதவைகளே! எனவே அதை சொல்லி சொல்லி நாமும் பொல்லாத கிரியைகளை செய்து தப்பித்துக்கொள்ள முடியும் என எண்ண வேண்டாம்! கர்த்தர் நமக்கு கொடுத்த காலத்தை மீட்டுக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. நம்முடைய நற்காலங்களில் நாம் எடுக்கும் சரியான முடிவுகளே, தீய காலங்களில் நம்முடன் துணையாய் நிற்கும்! நாம் தேவனுக்கு பிரியமில்லாத முடிவுகள் சிறிதேனும் எடுத்தால் அது நம்மை தொடரும்! எனவே ஞானமுள்ளவர்களாய் நடந்துகொள்வோம்.  🛑🛑🛑🛑🛑🔴 கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்ப...

கேள்வி பதில் கட்டுரை 1: கேள்வி: தேவன் என் ஜெபத்திற்கு பதில் தரவில்லை என்றால், வேறு ஆவிக்குரியவர் ஜெபித்தால் தருவாரா?

Image
பதில்: 1. சகரியா, எலிசெபெத்து அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நாம் உதாரனத்திற்கு பார்க்கும்போது, தேவன் அவர்கள் ஜெபத்துக்கு உடனடியாக பதிலை தரவில்லை என்பதை நாம் நன்று அறிவோம். இவ்விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்: அ. அவர்கள் தேவனிடத்தில் கேட்டது கர்த்தருடைய சித்தம் என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருந்தபடியால் அவர்கள் அதில் உறுதியாக இருந்தார்கள்  ஆ. அவர்கள் காத்திருப்பதில் சோர்ந்துபோகவில்லை என்பதை நாம் அறிவோம், காரணம் அவர்கள் ஆபிரகாம் சாராளை போல குறுக்கு வழியை தேடவில்லை  இ. காத்திரு என்பதும் ஒரு பதில் தானே?  ஈ. “நீ கேட்டது உனக்கு கிடையாது” என்பதும் பதில் தானே?  உ. சில நேரம் தேவன் இதை நமக்கு தரமாட்டார் என்று நாம் நன்றாக அறிந்தும், நாம் கேட்டுக்கொண்டு இருப்பது நம் தவறு. மற்றும் தேவன் நமக்கு அதை தரவில்லை என்பதற்காக நாமாக ஒரு முயற்சி செய்து, இதை தேவன் கொடுத்தார் என்று சொல்லிக்கொள்வது, பின்னர் விளைவுகளை பார்க்கும்போது நமக்கு நாம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பது நமக்கு பாடம் புகட்டும். ஊ. எனவே, தேவன் நமக்கு பதில் தரவில்லை என்று ஒருபோதும் ச...