புதிய மனிதனுள் இருக்கும் ஆவி!

இயேசுவின் சிலுவை கிரியை மற்றும் உயிர்த்தெழுதலினால், ஒரு புதிய மனுகுலத்தை தேவன் உருவாக்குகிறார்! இந்த புதிய மனிதனை அவர் உருவக்கிய விதம் சற்று ஆச்சரியமானது, ஏனென்றால், ஆதாமின் பாவத்தால் அடிமைகளான மனுகுலத்தை காப்பாற்ற தன் உயிரை தந்து மரித்து அடக்கம்பன்னப்பட்டு உயிர்த்தெழுந்தபின், உயிர்த்தெழுந்த கர்த்தரும், கிறிஸ்துவுமாகிய அவர், தமக்குள் ஒரே புதிய மனுகுலத்தை படைத்தார்! எப்படியென்றால், மரித்த கிறிஸ்துவை தேவன் உயிரோடெழுப்பியது தம்முடைய ஆவியைக்கொண்டு தான், அதேபோல கிறிஸ்துவை மரித்தோரிலிருந்தெழுப்பிய ஆவியைக்கொண்டு அவரை விசுவாசிக்கும் ஒவ்வொருவரையும், அவர்களுடைய மரித்த நிலைமையிலிருந்து உயிரோடெழுப்புகிறார்! ஆனால் இந்த புதிய மனுகுலம் வாழும் வீடு என்னவோ அதே பழைய மாமிச உடலில் தான்! ஆனால், இந்த ஆவியானவருக்கு மரித்தவனையே உயிரோடெழுப்பும் வல்லமையுள்ளதால், பழைய உடலின் மரித்த இச்சைகளை ஜெயிக்கவும் வல்லமையுண்டு என்பதை மறக்க வேண்டாம்! இந்த பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவையே மரித்தோரிலிருந்து எழுப்பும்படி தேவனால் அனுப்பப்பட்டவரென்றால், சாவுக்கேதுவான நம் உடல்களை உயிர்ப்பிக்கும் வல்லமை இவருக்கு உண்டு என்பதனையும் மறக்க வேண்டாம். எனவே புதிய மனிதனுக்குள் இருக்கும் ஆவியானவர், செத்த கிரியைகளை ஜெயிக்கும் வல்லமை படைத்தவர்! இவரைக்கொண்டு கிறிஸ்துவுக்குள் நாம் முற்றிலும் ஜெயம் கொண்டவர்களாக வாழ முடியும். இனியும் மாமிசத்தை ஒரு சாக்கு போக்காக சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்! மாம்ச சிந்தை மரனம்! ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்! சிந்தித்து பார்ப்போம்! 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 ரோமர் 8:1-11 1. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 2. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. 3. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 4. மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 5. அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். 6. மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். 7. எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. 8. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். 9. தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. 10. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். 11. அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 - Joshua Thangaraj G

Comments

Popular posts from this blog

When Ideologies Fail the Church: A Call to Holy Separation

Reclaiming Education as a Sacred Mission of the Church

Rethinking Humanity: What Jesus Reveals About the Dignity of Women