கடவுள் இருக்கிறாரா? யாத்திராகமம் குறித்த சிந்தனைகள்
கடவுள் இருக்கிறாரா? யாத்திராகமம் குறித்த சிந்தனைகள் என் வாழ்வின் சில தருணங்களில், கடவுளின் இருப்பை எவ்வித சந்தேகமுமின்றி என்னால் காண முடிகிறது. வேதாகம வசனங்கள் ஆழமான அர்த்தத்தோடு ஒளிர்கின்றன, ஜெபம் இயல்பாக வருகிறது. கடவுள் எனது சூழ்நிலைகளை எவ்வளவு லாவகமாகக் கையாளுகிறார் என்பதை எண்ணிப்பார்க்கும்போது ஆராதனை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இக்காலங்களில் கடவுளோடு நடப்பது, அவர் உருவமாய் என்னருகில் இருப்பது போன்ற ஒரு உணர்வை அளிக்கிறது; என் அன்பு கீழ்ப்படிதலாய் பொங்கி வழிகிறது. ஆனால், இன்னும் சில காலங்களில் கடவுள் விடுமுறையில் சென்றுவிட்டது போலத் தோன்றும். அதே வேதாகம வசனங்கள் உயிர் இல்லாதது போல் இருக்கும்; ஜெபத்தில் போராட வேண்டியிருக்கும், ஆராதனைக்கு என்னை நானே கட்டாயப்படுத்த வேண்டியிருக்கும். கடவுள் ஏன் சில நேரங்களில் இவ்வளவு தூரத்தில் இருப்பது போல் தோன்றுகிறார்? இஸ்ரவேலர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, நம் வாழ்வில் நாம் உணரும் அதே கடவுளின் இருப்பின் ஏற்றத்தாழ்வுகளை அங்கும் காண்கிறோம். யாத்திராகமத்தின் முதல் அதிகாரம், ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி (அவரது...