எல்லாம் புதிதான மனிதன்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
எல்லாம் புதிதான மனிதன்!
1. புதிதாக ஆக்கப்பட்டவன் - புதிய வாழ்க்கை வாழும்படி கிறிஸ்துவோடு தன் பாவங்களுக்காக சிலுவையில் முற்றிலுமாக செத்தவன், அடக்கம்பண்ணப்பட்டு, கிறிஸ்துவோடு எழுந்தவன்!
2. மெய்யான நீதி - ஒன்றுக்கும் உதவாத சுய நீதியையோ கோட்பாடுகளையோ, தத்துவங்களையோ அல்ல, இயேசுவின் சிலுவை மரணத்தினால் உண்டான நீதியினால் ஆக்கப்படவன்! இப்படி தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன்!
3. பரிசுத்தம் - இந்த பொல்லாத உலகத்தில் இருந்து முற்றிலுமாக பிரித்தெடுக்கப்பட்டு, தேவனுக்காக, தேவனால், வாழும்படி ஆக்கப்பட்டவன்!
4. தேவ சாயல் - தீமையின் பிரதிநிதியாக இருந்தவன், இப்போது காணப்படாத தேவனின் சாயலான கிறிஸ்துவின் சாயலுக்குள் உருவாக்கப்பட்டு, கிறிஸ்து மூலமாக தேவனுக்கு பிரதிநிதியாக வாழும்படி செய்யப்பட்டவன்!
5. இவன் வாழ்வில் இனி எல்லாம் புதிது!! இனி பழையதொன்றும் இல்லை!
6. இனி தீமைக்கு நம்மை விற்றுப்போட வேண்டாம்!!
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
எபேசியர் 4:17-32 TAOVBSI
https://bible.com/bible/339/eph.4.17-32.TAOVBSI
- Joshua Thangaraj G
Comments
Post a Comment