இந்த சுதந்திர தினத்தில் நான் ஏன் மூவர்ண கொடியுடன் செல்ஃபி எடுக்கப்போவது இல்லை?
#ilovemycountry #iloveindia #ilove_tricolor_flag #no_to_flag_selfie
இந்திய தேசிய கொடியை ஒரு இந்திய பிரஜையும் ( என்னை உட்பட) மறக்க முடியாது. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, மூவர்ண கொடியில் இருக்கும் நிறங்களை பற்றி எங்களது ஆசிரியர் விளக்கம் அளித்தார். காவி நிறம் - சுதந்திர போராட்டத்தின் தியாகத்தையும் பாடுகள் மற்றும் தைரியத்தையும், பலத்தையும் காட்டுகிறது, வெள்ளை நிறம் - சமாதானத்தை குறிக்கும், அசோக சக்கரம் - சத்தியம் மற்றும் தர்மத்தை குறிக்கும் ,பச்சை நிறம் - செழிப்பை குறிக்கும் என்று கற்றுக்கொடுத்தார்.
இவை எதையும் நிலைநாட்டி காட்டாத ஒரு அரசு இன்று மூவர்ண கொடியுடன் செல்ஃபி எடுத்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நமக்கு சொல்கிறது. செல்ஃபி எடுத்து சான்றிதழ் பெற்றுக்கொண்டால் நமது கொடியில் உள்ள அர்த்தம் நம் நாட்டில் நிலைநாட்டப்படுமா? நாட்டில் வெறும் காவி வர்ணம் மட்டும் வரவேண்டும் என்று உழைக்கும் இவர்கள் நமக்கு தேச பக்தியை கற்றுத்தருகிறது வெட்க கேடாக உள்ளது.
நால்வர்ணமாக மக்களை பிரித்து சூழ்ச்சி செய்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வாழ்ந்துகொண்டு சக மனிதனை ஒடுக்கிய காலத்தில், நம் தேசத்தின் நன்மைக்காக பாடுப்பட்ட,அண்ணல் அம்பேத்கார், காந்தியடிகள், பெரியார், அண்ணா, காமராஜர் உட்பட எல்லாம் பிறக்காததற்கு முன்னரே, இந்த மண்ணில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சம உரிமையையும், சம அந்தஸ்தையும், சுய மரியாதையையும், அன்பையும், கற்றுக்கொடுத்து, பெண் கல்வி, சாதி மறுப்பு, உடன்கட்டை ஏறுதல், அனைவருக்கும் கல்வி என்று இந்நாட்டை நன்னாடாக மாற்ற உழைத்த மிஷனரிகள் ( உள்ளூர், மற்றும் அயலூர்) ஏராளம். இவர்கள் உழைக்காது இருந்தால், பின்னர் வந்த தலைவர்கள் யாரும் கல்வி கற்றிருக்க முடியாது, அவர்கள் இந்த மண்ணுக்காக அரும்பாடு பட்டு இருக்க முடியாது.
ஆட்டோவின் கண்ணாடியை சரி செய்தால் ஆட்டோ ஓட்டும் என்று சொல்லப்படும் நகைச்சுவையை போன்ற தற்கால பிரதமரின் இந்த செல்ஃபி சான்றிதழ் அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது. அனைத்தையும் மாற்ற முயற்சிக்கும் இந்த ஜனநாயக படுகொலைக்காரர்கள், மூடியிருக்கும் வாய் உடைய சாந்த மற்றும் பலமுள்ள நம் நாட்டின் சின்னத்தை, இன்று வெறிகொண்டு கவ்வ நினைக்கும் சிங்களாக மாற்றிவிட்டார்கள், மூவர்ண கொடியின் மேல் அக்கறை உள்ளது போல் இருக்கும் இவர்கள், உண்மையில், காவி வர்ணம் மட்டுமே இருக்க வேண்டும் என்று உழைப்பவர்கள். நால்வர்ண கோட்பாட்டை நம்பும் இவர்கள், சப்கா சப்கா விகாஸ் (எல்லாருடைய உயர்வுக்காக எல்லோறோடும் இருப்போம்) என்று வாய் கூசாமல் பொய்யை சொல்கிறார்கள்.
காரணம், இந்நாட்டை நண்ணாடாக மாற்ற துடித்த மிஷனரிகளின் உழைப்பை கொச்சைப்படுத்தி, அவர்களை அயல் நாட்டு கைக்கூலிகள், மதம் பரப்ப வந்தவர்கள் மற்றும் கலாச்சாரத்தை அழித்தவர்கள், பாவாடைகள் என்று சொல்வதில் பெருமைகொண்டு, சாதாரண மனிதனின் ஓட்டைவாங்குவதே இவர்கள் தேசபக்தி. இவர்கள் எப்படி எல்லோருக்குமான தலைவர்களாக இருக்க முடியும்? காந்தியடிகளை கொன்ற கும்பலின் வழித்தோன்றல்கள் இன்று அறத்தை பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி உண்டு?
உண்மை நிலவரம் என்னவென்றால், இவர்கள் கையிலிருந்து இந்தியாவை காப்பாற்றும் சுதந்திர போராட்டம் இன்று தேவை. இவர்களின் கருத்து இந்திய தேசத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை கடந்த 10 ஆண்டுகள் நமக்கு நன்றாக காட்டிவிட்டன.நாள்வர்ண கோட்பாட்டை நாம் எதிர்க்கவேண்டும், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சட்டம், ஒரே மதம் போன்றவற்றை எதிர்க்க வேண்டும். சாதியை மறுக்க வேண்டும், குடிபெருமையை எரிக்க வேண்டும், அன்பை வளர்க்க வேண்டும், சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுக்க வேண்டும், நீதியை செய்ய வேண்டும், மனித நேயத்தை வளர்க்க வேண்டும். தீமைக்கு எதிரான போரில், இரத்தம் சிந்தும் சூழ்நிலைக்கும் நம்மை தயார்படுத்த வேண்டும். மனித தீமையிலிருந்து மனிதனை காப்பாற்ற வந்த இயேசு கிறித்துவின் நற்செய்தியை நம்பி ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும், நம் தேசத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும்.
நீ கிறித்தவர் என்று சொல்லிக்கொண்டு, சாதிய பெருமை உன்னிடம் இருந்தால், நீ நால்வர்ண கோடப்பாட்டை ஆதரிப்பவன், மற்றும் இந்த தேசத்தின் அழிவுக்கான சக்தி, மற்றும், கிறித்தவத்தின் ஆன்மாவான கிறிஸ்துவின் நற்செய்தியின் துரோகி என்பதை மனதில் வைத்துக்கொள்.
இந்திய கொடியின் கோட்பாட்டையும், இந்திய விடுதலையையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் மதித்தும், நேசித்தும் இருக்கும் நான் இந்த செல்ஃபி சான்றிதழைப் பெற போவது இல்லை. இந்த முடப்பழக்கத்தை எதிர்க்கிறேன்.
- யோசுவா தங்கராசு ஞானசேகர்
இயன்முறை மருத்துவர், விவிலியப்போதாகர், நற்செய்தி தூதுவர், மற்றும் எழுத்தாளர்.
#ilovemycountry #iloveindia #ilove_tricolor_flag #no_to_flag_selfie
Comments
Post a Comment