சாதிய சாக்கடை
எந்த எண்ணம் கொண்டினைந்தாலும், மாந்தரனைவரும் இறைவனின் சாயலில் இறைவனால் ஆக்கப்பட்டவர்கள் என விவிலியம் கூறும் உண்மை உணர்ந்தால், அனைவரும் சமமே எனும் நிலையே உண்மையென உணர்வாய்!
அவரவர் தமக்குத்தாம் சரி தவறை நிர்னையித்துக்கொள்ளும் ஆற்றல்பெற முதல் மாந்தன் செய்த பிழையே இன்று மாந்தனை பாழாக்கியுள்ளது!
இப்பாழிலிருந்து மாந்தனை மீட்க அன்பின் ஆகசிறந்த அடையாளமாம் ஈகையை மண்டைஓட்டுமேடென்னும் ஓர் மேட்டில் மரணபொறியொன்றில் தன்னையே தந்தான் மாந்தனாய் வந்த இயவுள்!
அன்பு அன்பென்று பறைசாற்ற முயலும் ஆகபெருந்தலைவர்பலர் மத்தேயு 5 முதல் 7 முடிய ஓதி கண்டால் தம் வாய் மூடிகொள்வர்.
மாந்தனாய் வந்தோன் உயிரதை தந்தான் ஈசனவன் தானே அன்பென காட்டினான். எழுந்துயிர்த்தனன் நாளொரு மூன்றிலென பாரதி பாடியதெத்துனை உண்மை! நேரில் கண்டோர் பறைசாற்றியுறைத்தார்!
நம்பி நல்சிந்தையிலவனை ஏற்றார் பாழிலிருந்து மீள்வார்! மீண்டோர் சாதியெனும் சாக்கடை எண்னங்கள் போன்ற தீதிலிருந்து தமைகாத்துக்கொள்வார்!! செத்தெழுந்துயிர்த்த ஈசனின் ஓசைகேட்டோர் மனிதபாழின் விளைவாம் சாவிலிருந்து ஓய்வார்!! ஒய்வாய் வாழ்வார் நீடுழி!
- யோசுவா தங்கராசு ஞானசேகர்
#சாதி_வெறி_ஒழிக #nocaste #ஒற்றுமை #சுவிசேசம் #நற்செய்தி
Comments
Post a Comment