தீண்டாமைக்கு எதிராக அம்பேத்காரும், காந்தியும், கிறித்தவ மிஷனெரிகளும், உண்மையும்.

தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கும் மாமேதைகள், சாதிய ஒடுக்குமுறைக்கு காரணமாகும் சனாதனத்திற்கெதிராகவோ, நால்வர்ண கோட்பாட்டிற்கு எதிராகவோ குரல் கொடுக்க தயங்குவதின் காரணம், நால்வர்ண கோட்பாடே சனாதனத்தின் ஆன்மாவாக அமைகிறது. சாதி மறுப்பும், சனாதன எதிர்ப்புமே, தீண்டாமையை உண்மையாக ஒழிக்கும். தீண்டாமை ஒரு பாவ செயல் என மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி கூறுவது உண்மையென்றால், தீண்டாமையின் ஆணி வேரான சனாதனத்தின் நால்வர்ண கோட்பாடு தான் அந்த பாவ செயலின் காரணி. இதை சரியாக புரிந்துகொள்பவன், காந்திக்கும், டாக்டர் பீமாராவ் அம்பேத்காருக்குமுள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வான், சனாதனத்தின் இந்த தீய சிந்தனையாம் சாதிய பாகுபாட்டை களையவே, 1700 களிலிருந்து, 1900கள் வரை அனேக கிறித்தவ மிஷ்னெரிகள் வேதங்களையும், சனாதன நூல்களையும், எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் மொழிபெயர்த்தனர். சனாதனத்தின் கள்ளத்தனத்தை மக்கள் புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே, கல்வியை நால்வர்ண கோட்பாட்டின்படி ஒடுக்கப்பட்டோருக்கு மறுத்து வந்தனர். ஆனால், 1800களில், வில்லியம் கேரி எனும் மிஷனெரி, சமஸ்கிருதத்தை சாதாரன மக்கள் புரிந்துக்கொள்ள செய்தார், வேதங்களை மொழிபெயர்த்தார், பிற்காலத்தில் இன்னும் பல மிஷனெரிகள் இதற்காக உழைத்தனர். டாக்டர். பாபு வர்கீஸ் அவர்கள் எழுதிய "let There be India" என்ற ஆய்வு நூலில், இவைகளின் தரவுகள் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாராக 2000 ஆண்டுகளாக சாதிய ஒடுக்குமுறைக்குள் அடங்கி கிடந்த மக்களின் வாழ்வில் ஒரு சிறு நம்பிக்கை கதிர் துளிர்க்க துவங்கியது. தமிழகத்திலோ, 1700 கடைசிகளிலேயே, பர்த்தலோமேயு சீகன்பால்க் எனும் ஜெர்மானிய மிஷனெரி, சனாதனத்தின் சதியை அம்பலப்படுத்த துவங்கினார். பெண் கல்வியை தந்தார். ஒடுக்கப்பட்டோருக்கான மேம்பாட்டு திட்டங்களை வகுத்தார். 1800 களில், ரேனியஸ் எனும் மிஷனெரியும், பிற்காலங்களில் அவரது மானவரான ஜான் கிறிஸ்தியன் அருளப்பன் எனும் இறைப்பணியாளரும், சனாதன சாதியத்திற்கு விரோதமாக உழைத்தனர். இவர்களின் முயற்சியால் தான் பிற்காலத்தில் வந்த அம்பேத்கார் போன்ற சமூக போராளிகளுக்கு இந்த சனாதனத்தின் சதிகளைப்பற்றிய உண்மைகள் தெரியவந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது, காரணம் சனாதனத்தின் ஆணிவேரை அகற்ற கிறித்தவ தொண்டு மிக பெரிதாக உதவியிருந்தாலும், பிற்காலத்தில் வந்த வரலாற்று ஆய்வாளர்களால் ஏனோ மறைக்கப்பட்டிருக்கிரது. ஆனால் பிற்காலத்தில் 1900களில் தனது எளிமையான தோற்றத்தாலும், மக்களை கவர்ந்து, தீண்டாமைக்கு விரோதமான போராட்டங்கள் (சனாதனத்தையோ, நால்வர்ணத்தையோ எதிர்க்கவில்லை) மூலமாக எளிய மக்களின் கவனத்தைப்பெற்ற மோகந்தாஸ் கரம்சந்த் எனும் மனிதரோ மகாத்மா என்று அழைக்கப்பட்டு இன்றளவும் போறப்படுகிறார். இவரை நான் மகாத்மா என்று அழைப்பதில்லை என்று டாக்டர். அம்பேத்கார் 1955ம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு காரணங்களோடும், ஆதாரங்களோடும் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கும் சில விடயங்கள் மிகுந்த கவனத்திற்குண்டானவை. திரு. மோகந்தாஸ் கரம்சந்த் அவர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள், மற்றும் சீக்கியர்கள் மட்டுமே தேர்தலில் பிரதினிதித்துவப்படவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார், இதை அவர் முன்வைக்கும்போது, அவரது நெருங்கிய நண்பர்கள் அவரிடத்தில் ஏன் பட்டியல் இனத்தாரோ, கிறித்தவர்களுக்கோ இந்த உரிமை இருக்கக்கூடாது என்று கேட்டப்பொழுது அவரிடத்தில் பதில் இல்லை என்று அம்பேத்கார் தன் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அன்று கிறித்தவர்களுக்கும் சேர்த்து தான் அம்பேத்கார் குரல் கொடுத்திருக்கிறார் என்பதே நிதர்சனம். ஆனால் இன்று கிறித்தவர்கள் கூட, தங்கள் சனாதனத்தின் நால்வர்ண கோட்பாட்டின் அடிப்படையிலிருக்கும் சாதிய சாக்கடையில் இன்னும் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகுந்த வருத்தமாக உள்ளது. சனாதனத்தை ஆதரிக்கும் காந்தி, தீண்டாமைக்கு விரோதமாக குரல் கொடுப்பது எப்படி மூடத்தனமோ, இயேசுவின் அன்பை அறிவிக்கும் நாமும் சனாதனத்தின் நால்வர்ண கோட்பாட்டின் அடிப்படையிலிருக்கும் சாதியை தூக்கிப்பிடிப்பதும் அயோக்கியத்தனம் தான். கிறித்தவர்களிடம் இருந்த சாதிய பாசம் உண்மையான இயேசுவை அம்பேத்காருக்கு வெளிகாட்டமல் போய் விட்டதோ!? சிந்திப்பீர் அன்புக்குரியவர்களே, சாதியை மறுக்காமல், தீண்டாமையை ஒழிக்க முடியாது. சாதியை மறுக்காமல், தீண்டாமை ஒழிப்பப்பற்றி பேசும் அனைவரும் அயோக்கியர்களே!! இதைச் சொல்ல நான் ஒருபோதும் பயப்படப்போவதில்லை. இனியாவது சிந்திப்பீர். #Gandhi #ambedkar #nocaste #சாதி_மறுப்பு - ஜோஷ்வா தங்கராஜ் ஞானசேகர் இயன்முறை மருத்துவர், விவிலியப்போதகர் (வாழ்வு தரும் நற்செய்தி மன்றம், கண்ணகி நகர் சென்னை.) எழுத்தாளர், சொற்பொழிவாளர்.

Comments

Popular posts from this blog

When Ideologies Fail the Church: A Call to Holy Separation

Reclaiming Education as a Sacred Mission of the Church

Rethinking Humanity: What Jesus Reveals About the Dignity of Women