இறைவனின் சமூகம் வியாபாரிகளின் கூடாரம் அல்ல!
இறைவனின் சமூகம் வியாபாரிகளின் கூடாரம் அல்ல!
-Dr.Joshua Thangaraj Gnanasekar
(Physiotherapist, Bible Teacher, Author, Good news Herald)
யோவான் 2:16 இல் ,இயேசு புறாக்களை விற்றுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “இவைகளை இங்கிருந்து அகற்றிவிடுங்கள். என்னுடைய பிதாவின் வீட்டைச் சந்தையாக மாற்ற எப்படித் துணிந்தீர்கள்!” என்றார்.“
என்று எழுதியிருக்கிறது.
எது வியாபாரம்? ஒரு முதலீட்டை செய்து, உழைத்து, அந்த முதலீட்டிலிருந்து லாபம் பெருவதே வியாபாரம்.
இறைவனின் சமூகத்தில் நமது முதலீடு என்ன? நமது நேரமா? அது அவர் நமக்குத் தந்தது அவரால் அதனை எடுத்துக்கொள்ள முடியும்!
நமது பொருட்களா? அவையும் அவர் நமக்குத் தந்தவை. இப்படியிருக்க, அன்று யூதர்கள் இறைவனின் ஆலயத்தில் புறா விற்பது, ஆடுமாடுகளை விற்பது போன்ற வியாபாரங்களை செய்து வந்தனர். இறைவனை ஆராதிக்க வரும் நபர்கள் அங்கு வந்து பேரம் பேசி, பலி செலுத்த மிருகங்களை ஆயத்தம் செய்து அவைகளை வாங்கி அவைகளை இறைவனுக்கு பலி செலுத்தினர்!
ஆனால் அவரோ, பலியை விரும்பாதவர்! பலிகளை காட்டிலும் கீழ்ப்படிதலே அவருக்கு ஏற்றது! உங்கள் பலிகளின் திரள் எண்ணத்திற்கு என்று இறைவன் மனிதனை பார்த்து கேட்கிறவராக இருந்தார். அப்படிப்பட்ட இறைவனுக்கு பலிகளை செலுத்த மிருகங்களை வியாபாரம் செய்வதை விரும்பாத இயேசு மனிதனாக வந்த இறைவனானதால், அவர் மிகவும் கோபப்பட்டு அந்த வியாபாரிகளை வெளியே துரத்தினதுமல்லாமல், மனிதன் தனது தீமையினாலே இறைவனை விட்டு தூரம் போய், இறைவனை தான் தனது வழியில் தேட ஆரம்பித்து, பற்பல வழிபாட்டு முறைகளை உருவாக்கினான்.
இறைவனோ மனிதனை தேடி, மனிதன் புரிந்துகொள்ளும் விதத்தில், மனிதனாக வந்து, மனிதனின் தீமையை சுமக்கும் பலியாக மாறி, சிலுவையில் மனிதனுக்காக தீமைக்கான இறைத்தண்டனையை சகித்து, மரித்து அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, மனிதனோடு என்றென்றும் வாழவும், இனி மனிதன் கடவுளை எங்கும் தேடுவதற்கான அவசியம் இல்லாவகையில், அவரே கடவுளை அடைய வழியை ஏற்படுத்தினார்!
ஒவ்வொரு மனிதனையும் இறைவனின் வீடாக மாற்றும் இறைவனுக்கு பலி தேவாயில்லை, எனவே பலிக்கான வியாபாரமும் தேவை இல்லை. இன்று இயேசுவை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்பவர் அனைவரும் இறைவனின் ஆலயமாக முடியும்!
சிந்திப்பீர்!
Comments
Post a Comment